• பத்திரிகையாளர் நலவாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன்), பி.கோலப்பன் (தி இந்து), எஸ்.கவாஸ்கர் (தீக்கதிர்), எம்.ரமேஷ் (புதிய தலைமுறை தொலைக்காட்சி), லெட்சுமி சுப்பிரமணியன் (தி வீக்) ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதனன்று (ஏப்.20) தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.