புதுதில்லி, அக். 6 - இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி கடந்த 6 மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. ‘எஸ் அண்ட் பி குளோபல் இந்தியா சர்வீசஸ் பர்சேசிங் மேனேஜர்ஸ்’ (Purchasing Managers’ Index - PMI) ஆய்வின் படி, செப்டம்பர் மாதத்தில் இந்திய சேவைத் துறையின் வளர்ச்சி 54.3 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் சேவைத்துறை வளர்ச்சி 57.2 புள்ளிகளாக இருந்த நிலையில், அது கணிச மாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் நிலையில், இந்திய சேவை துறை செப்டம்பர் மாதம் வர்த்தகம் மற்றும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலை யில் 6 மாத சரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக வளர்ச்சிக் (PMI) குறியீடு 50 புள்ளி களுக்கு அதிகமாக இருந்தால் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள். எனினும், 57.2 புள்ளிகளில் இருந்து 54.3 புள்ளிகளாக குறைவது சரிவாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய சேவைத் துறை மார்ச் மாதத்தில் இருந்து தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில்தான் அது சரிவைச் சந்தித்துள்ளது. அதுமட்டுமல்ல,
அதுமட்டுமல்ல, கொரோனா தொற்று காலத்திலும், ரஷ்ய - உக்ரைன் போர் துவங்கிய பின்பும் கூட இந்திய சேவைத் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே பய ணித்தது. இந்திய சேவை துறை செப்டம்பர் மாதம் வரை யில் சுமார் 14 மாதமாக தொடர் வளர்ச்சி பாதையில் இருந் தது. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் சேவைத் துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் ஆகஸ்ட் மாத த்தைக் காட்டிலும் சேவைத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாகவே உருவாக்கப்பட்டு இருப்பது பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, சேவைத் துறையானது, ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தது. இந்தியப் பொருளாதார மையத்தின் (CMIE) தரவு களின்படி செப்டம்பர் மாதம் நாட்டின் வேலை வாய்ப்பின்மை அளவு 6.43 சதவிகிதம். இது ஆகஸ்ட் மாதத்தில் 8.28 சதவிகிதமாக இருந்தது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு 4.1 சதவிகிதமாக இருந்தது. மேலும், இக்காலக்கட்டத்தில் நாட்டின் பணவீக்க மும் ஆகஸ்ட் மாத அளவிற்குத்தான் இருந்தது, ஆயினும் சேவைத் துறையில் பதிவான சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதேபோல் உற்பத்தி துறை (PMI) குறியீட்டின் அள வும்- ஆகஸ்ட் மாதத்தில் 58.2 சதவிகிதமாக இருந்த நிலை யில் செப்டம்பர் மாதம் 55.1 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், சர்வதேச பொருளாதார மந்த நிலையில் அபாயத்திற்குள் இந்தியாவும் சிக்கிக் கொள்ளும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.