இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
மும்பை, ஆக. 29 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபா யின் மதிப்பு இதுவரை இல் லாத சரிவைக் கண்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு, பிப்ரவரி மாதத்தில் 87.95 ரூபாய் என்ற அள விற்கு சரிவைக் கண்டது. தற்போது, வெள்ளிக்கிழமை யன்று (ஆகஸ்ட் 29) 88.29 ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் அமெரிக்க டாலர் விற்பனையே இதற்கு காரணம் என வணிகர்கள் கூறினர். நடப்பாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 3 சதவிகிதம் அள விற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
உறவில் முன்னேற்றம் : கனடாவுக்கான இந்திய தூதர் நியமனம்!
புதுதில்லி, ஆக. 29 - நிஜார் கொலை வழக்கைத் தொடர்ந்து இந்தி யா - கனடா நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்தது. தற்போது, உறவு களில் முன்னேற்றம் ஏற்பட்டு ள்ளதையடுத்து, இருநா டுகளும் புதிய தூதர்களை அறிவித்துள்ளன. இந்தி யாவுக்கான கனடாவின் புதிய தூதராக கிறிஸ்டோ பர் கூட்டர் நியமிக்கப் பட்டுள்ளதாக கனடா தெரி வித்துள்ளது. ஸ்பெயினில் தூதராகப் பணியாற்றும் தினேஷ் பட்நாயக் கனடாவுக்கான இந்திய தூதராக பணி யாற்றுவார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள்
சென்னை, ஆக. 29 - வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 3 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் செப்டம்பர் 10 அன்று வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.