tamilnadu

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு!

புதுதில்லி, ஆக. 1 - “ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி னால் கூடுதல் வரி - அப ராதங்களை விதிப்போம்” என அமெரிக்கா மிரட்டல் விடுத்த பின்னணியில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நரேந்திர மோடி அரசு நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி யாக பதவியேற்ற டொனா ல்டு டிரம்ப், கூடுதல் வரி விதிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து, உலக நாடுகளை மிரட்டினார். குறிப்பாக, ரஷ்யாவை மையப்படுத்தி இந்த தாக்கு தலை ஆரம்பித்த அவர், ரஷ்யாவுடன் உறவு வைத்துள்ள நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிப்போம் என்றார்.  இதற்கு, உக்ரைன் மீதான போரை காரணமாகக் காட்டிக் கொண்ட டிரம்ப், “ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகம், உக்ரைன் மீதான போருக்கு தேவையான நிதி ஆதாரத்தை அந்நாட்டிற்கு வழங்குகிறது; இதனால் ரஷ்யாவிடம் எண்ணெய்வாங்கும் நாடுகள் மீது  100 சதவிகிதம் வரி விதிப்பேன்” என ஜூலை 14 அன்று மிரட்டல் விடுத்தார்.  நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டோவும், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கோள்ளும் நாடுகள் தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ஜூலை 17 அன்று மிரட்டல் விடுத்தார்.

பகிரங்க மிரட்டல்

இந்த மிரட்டல்களுக்கு வலுவான பதிலடி கொடுப்பதற்கு மாறாக, ரஷ்யாவிடம் மட்டுமின்றி, பிற நாடுகளிடம் இருந்தும் இந்தியா எண்ணெய் வாங்குகிறது; அதனால் பாதிப்பில்லை என ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமாளித்தார்.  ஆனாலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த  பேட்டியில், “இந்தியா நட்பு நாடு தான்; ஆனால், எல்லா வற்றிலும் அவர்களுடன் 100 சதவிகிதம் ஒத்துப்போக வேண்டியதில்லை; அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிச்சயமாக அமெரிக்காவை எரிச்சலூட்டும் செயல் தான்” என தமது அரசின் வன்மத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா அதிகாரிகள் நடத்திய வர்த்தகப் பேச்சு வார்த்தையிலும் அமெரிக்கா திருப்தி அடையவில்லை. இதனால், இந்தியாவுக்கு கெடு விதிக்க ஆரம்பித்த டிரம்ப், “இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது, ஆகஸ்ட் 1 முதல் 25 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும்; அத்துடன் ரஷ்யா உடனான வர்த்தகத்திற்காக இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும்” என்று புதன்கிழமையன்று அறிவித்தார். “இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் செத்துப்போன பொருளாதாரங்களுடன் ஒன்றாக வீழ்ச்சியடையட்டும்...!” என்றும் அவர் அடாவடியாக பேசினார்.

கமுக்கமான சரணாகதி

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து, பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. பதிலடி நடவடிக்கை என்று எதையும் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்க வில்லை. இதற்கிடையே தான், இந்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் மங்களூரு சுத்திகரிப்பு பெட்ரோகெமிக்கல் லிமிடெட் ஆகியவை கடந்த ஒரு வாரமாகவே ரஷ்ய  கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் ஒன்றிய அரசும் இந்த நிறுவனங்களும் இன்னும் வெளியிடவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்பதன் மூலம், சர்வதேச அரசியல் பொருளாதார உறவுகளில் இந்தியாவின் பாரம்பரியமான தனித்துவமான நடவடிக்கைகளிலிருந்து நரேந்திர மோடி அரசு விலகி விட்டது; அமெரிக்கா மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப்பின் மிரட்டலுக்கு, இந்தியாவின் நலன்களை நரேந்திர மோடி அரசு காவு கொடுத்து விட்டது என்று கண்டனங்கள் எழுந்துள்ளன. உலகளவில் அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா, ரஷ்யா - உக்ரைன் போருக்கு பிறகு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் காரணமாக மிகக்குறைந்த அளவிற்கே சர்வதேச சந்தையில் ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையிலும் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. இந்தியாவின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 35 சதவிகிதம் வரை ரஷ்யாவில் இருந்து வருகிறது.  இந்நிலையிலேயே, அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை மோடி அரசு நிறுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் எரிபொருட்களின் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது.

கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 7 முதல் அமல் 

கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 7 முதல் அமல்  “வர்த்தக வரி நிறுத்தி வைக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 1 அன்று திருத்தப்பட்ட வர்த்தக வரி பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். வரிகளை அமலாக்குவதற்கான நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார். அதில், இந்தியா மீதான 25 சதவிகித வரி உட்பட 69 வர்த்தக கூட்டாளிகளுக்கு 10 சதவிகித அடிப்படை வரியுடன் கூடிய பரஸ்பர வரி ஆகஸ்ட் 7 முதல் அமலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணிந்து நிற்க சிபிஎம் வலியுறுத்தல

புதுதில்லி, ஆக. 1 - அமெரிக்கா விதித்திடும் நிர்ப்பந்தங் களுக்கு இந்தியா பணிந்திடாது அத னை எதிர்த்து நிற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: இந்தியப் பொருட்களுக்கு 25 சத விகித வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்ததை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியா, ரஷ்யாவுடனான உறவு களைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப்  விரும்புகிறார். இந்திய அரசு இவற்றை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும், அதன்மூலம் இந்திய மக்களின் நலன் களைப் பாதுகாத்திட வேண்டும். இந்தியா தனது விவசாயம், பால்பண்ணை, மருந்து மற்றும் பிற துறைகளை அமெரிக்க நிறுவனங்  களின் சுரண்டலுக்குத் திறக்காவிட் டால், வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பலமுறை மிரட்டியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்தை திருப்திப் படுத்தும் வகையில், இந்திய அரசாங்க மும் ஏற்கெனவே அமெரிக்காவுடன் பாது காப்பு மற்றும் எண்ணெய் ஒப்பந்தங் களில் நுழைந்து, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் எண்ணெய்யை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும் இப்போது, அமெரிக்கா மேலும் அதிக சலுகைகளை இந்தியாவிடமிருந்து கோரியிருக்கிறது. இந்திய அரசாங்கம் அமெரிக்கா வின் அழுத்தத்திற்கு அடிபணியவோ அல்லது இந்திய பொருளாதாரத்தையும் சந்தைகளையும் அமெரிக்காவின் சுரண்டலுக்குத் திறந்து விடவோ கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது  இந்திய தொழில்துறை மற்றும் விவசாயத் திற்கு தீங்கு விளைவிக்கும். பாஜக தலைமையிலான அரசாங்கம் தனது இறையாண்மையை நிலைநாட்டவும், அமெரிக்காவின் கொடுமைப்படுத்துதல் உத்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கவும் வேண்டும் என்றுதான் இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  (ந.நி.)