tamilnadu

img

விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் அபிஷேக் சர்மாவால் தப்பி பிழைக்கும் இந்திய அணி

17ஆவது சீசன் ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4ஆவது “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் இந்தியா  - வங்கதேச அணிகள் மோதின (புதன்கிழமை). முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக் கூடிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி (19.3 ஓவர்கள்  121 ரன்களில் ஆட்ட மிழப்பு) 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி  அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 12 ஆவது முறையாக ஆசியக்கோப்பை தொட ரில் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவால் இந்திய அணி தப்பி பிழைத்தது. தொடக்கத்தில் அவரது அதிரடி தான் 168 ரன்களை எட்ட உதவியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடாமல் இருந்திருந்தால், இந்திய அணி 100 ரன்னுக்குள் சுருண்டு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும். இந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல ஆசியக் கோப்பையின்  பெரும்பாலான ஆட்டங் களில் இந்திய அணி அபிஷேக் சர்மாவால் தான் தப்பிப் பிழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி முக்கியமல்ல... போட்டி தான் முக்கியம்...

ஆசியக் கோப்பையில் இந்திய அணி யின் கேப்டனாக சூர்ய குமார் செயல் பட்டு வருகிறார். பேட்டிங்கில் நல்ல பார்மில் தான் உள்ளார். ஆனால் போட்டியில் கவனம் செலுத்தாமல் பேட்டியில் (பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் மிக அதிகமாக) மட்டுமே கவ னம் செலுத்தி வருகிறார். அதனால் பேட்டியில் கவனத்தை குறைத்துக் கொண்டு போட்டியில் அதிகம் கவனம் செலுத்துவது அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். விளையாட்டு வீரர்கள் பொதுவாக அரசியல் மேடை போன்று பேட்டிகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் சூர்ய  குமார் இதனை மாற்றிக்கொள்வது நல்லது  என நெட்டிசன்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

மேஜர் லீக் கால்பந்து தொடர் : மெஸ்ஸி புதிய சாதனை

அமெரிக்காவின் முக்கிய கிளப் கால்பந்து தொடராக இருப்பது மேஜர் லீக் (எம்எல்எஸ் - மேஜர் லீக் சாக்கர்) ஆகும். இந்த தொடரின் 2025ஆம்  ஆண்டுக்கான, 30ஆவது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில்  மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி  4-0 என்ற கோல் கணக்கில் நியூயார்க் சிட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.  இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி கேப்டன் மெஸ்ஸி 2 கோல்கள் விளாசி னார். இதன்மூலம், தொடர்ச்சியாக இரண்டு சீசனில் 35 கோல்களுக்கும் அதிகமாக பங்காற்றி புதிய சாத னையை நிகழ்த்தியுள்ளார் மெஸ்ஸி. கடந்த சீசனில் 19 போட்டிகளில் விளை யாடிய மெஸ்ஸி 20 கோல்கள், 16 அசிஸ்ட் (உதவி) செய்து 36 கோல் களில் பங்காற்றியிருந்தார். இந்த சீசனில் 23 போட்டிகளில் விளையாடி 37 கோல்களில் பங்காற்றியுள்ளார். மேலும், தங்கக் காலணி (கோல்டன் பூட்) பட்டியலிலும் முதலிடத்தில் உள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி அறிவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் விபரம் : சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜாஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

இந்தியா - இலங்கை

இடம் : துபாய் சர்வதேச மைதானம் நேரம் : இரவு 8 மணி சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)