பீகாரில் “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்
லோக் போல் கருத்துக்கணிப்பில் தகவல்
பாட்னா 243 சட்டமன்றத் தொகுதிகளை பீகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்த லில் ராஷ்டிரிய ஜனதாதள ஆர்ஜேடி) தலை மையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் விகாசில் இன்ஸான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி (பசுபதி) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய “இந்தியா” (பீகாரில் மகா கூட்டணி) கூட்டணியும், பாஜக தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜன நாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. மேலும் ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சி (ஓவைசி), பகுஜன் சமாஜ், ஜன் சுராஜ் (பிரசாந்த் கிஷோர்) உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன. இந்நிலையில், பீகார் சட்டமன்ற தேர்த லுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான “லோக் போல் (Lok Poll)” வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் 243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் 39% முதல் 42% வாக்குகளுடன் 118 முதல் 126 தொகுதிகளை கைப்பற்றி “இந்தியா” (மகா) கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல 38% முதல் 41% வாக்குகளுடன் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 105 முதல் 115 தொகுதிகளை மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என்றும், இதர கட்சிகள் 2 முதல் 5 இடங்களை (12% முதல் 16% வாக்குகள்) வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க 122 தொகுதிகளில் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என முதற் கட்ட கருத்துக்கணிப்பிலேயே கூறப்படுவதால் “இந்தியா” கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் அடுத்தகட்ட பிரச்சார வேலைகளை துவங்கி யுள்ளனர். பிரசாந்த் கிசோருக்கு வாய்ப்பில்லை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் “ஜன் சுராஜ்” கட்சியும் பீகார் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பின் நாங்கள் ஆதரவு அளிக்கும் கட்சியே ஆட்சி அரியணையில் அமரும் என்று கூறி வருகிறார். ஆனால் ஜன் சுராஜ் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என லோக் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.