tamilnadu

img

தொழிலாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துக! ஐசிஎப் தொழிலாளர் சங்க பொது மகாசபை வலியுறுத்தல்

தொழிலாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துக!ஐசிஎப் தொழிலாளர் சங்க பொது மகாசபை வலியுறுத்தல்

சென்னை, செப். 15 - உற்பத்திக்கு ஏற்ப தொழிலாளர் எண்ணிக்கை யை அதிகப்படுத்த வேண்டும் என்று ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனி யன்  சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. யூனியனின் 50ஆவது ஆண்டு பொது மகாசபை  சனி, ஞாயிறு (செப். 13,14) ஆகிய இரண்டுநாட்கள் ஐசிஎப் வளாகத்தில் நடை பெற்றது. பொது மகா சபைக்கு, சங்கத்தின் தலைவர் சி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் தலைவர் பா.ராஜ ராமன் சங்க கொடியை ஏற்றினார். துணைத் தலை வர் ஜெ.கதிரவன் வர வேற்றார்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை மகாசபையை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் கே.டி.ஜோஷி யும், வரவு,செலவு அறிக்கை யை பொருளாளர் ஜி.நட ராஜனும் சமர்ப்பித்தனர். டிஆர்இயு பொதுச்செய லாளர் வி.ஹரிலால், சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. முருகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் 50ஆவது ஆண்டு மலரை வெளியிட்டு, நிறைவுரையாற்றினார். மூத்த தலைவர் காசிவிஸ்வ நாதன் மலரை பெற்றுக் கொண்டார். துணைத் தலைவர் எஸ்.சிவராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் பாலஸ்தீன ஆதரவு நிதியாக ரூ.7410 சங்கத்தின் சார்பில் அ.சவுந்த ரராசனிடம் வழங்கப்பட்டது. முன்னதாக சென்னை கலைக்குழுவின்  ‘பட்டா ங்கில் உள்ளபடி’ மற்றும் ‘இடம்’ நாடகங்களும், பேராசிரியர் காளீஸ்வரனின் மாற்று ஊடக மையம் சார்பில் பறைஇசை, கிராமிய கலை நிகழ்ச்சிகள்,  சாந்தி நாராயணசாமியின் நடனம் நடைபெற்றது. தீர்மானம் ஐசிஎப்பில் தனியார் மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போனஸ் உச்சவரம்பை நீக்கி முழு ஊதியத்திற்கு ஏற்ப போனஸ் கணக்கிட்டு வழங்க வேண்டும். உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும்.  8ஆவது ஊதியக்குழு வின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து 1.1.2026இல் ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், புதிய மாடல் கோச்சு உற்பத்திக்கு முறையாக நிதிஒதுக்க வேண்டும், மாற்றுத்திற னாளிகளுக்கு பதவி உயர்வில் இந்திய ரயில்வே  வாரியம் வழிகாட்டுதல்படி முறையாக இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மாத ஊதியம் 10 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு யூனியனின் தலைவ ராக ஜெ.பிரான்சிஸ் மெக்கோல்டு, பொதுச்செய லாளராக கே.டி.ஜோஷி, பொருளாளராக ஜி.நட ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.