tamilnadu

img

தருமபுரி, சேலம் மாவட்டத்தில் கவுன்சிலர்கள் பதவியேற்பு

தருமபுரி, மார்ச் 3- தருமபுரி, சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் புதனன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர் கள் புதனன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்ஒருபகுதி யாக தருமபுரி நகராட்சி கூட்டரங்கில் பதவியேற்பு விழா  நடைபெற்றது. இதில், தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள  33 வார்டுகளில் திமுக 18 இடங்களையும், அதிமுக 13 இடங் களையும், விசிக, சுயேட்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி  பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் புத னன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு நக ராட்சி ஆணையாளர் சித்ரா பதவி பிரமாணம் செய்து வைத் தார். சேலம் சேலம் மாநகராட்சியில் திமுக 50 இடங்களிலும், 7 இடங் களில் அதிமுகவும், 3 இடங்களில் சுயேட்சை வேட்பாளர் களும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சி யில் வெற்றி பெற்ற 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கவுன்சிலர் களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மத்திய  மாவட்ட செயலாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.