tamilnadu

img

மன்னார்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

மன்னார்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா

மன்னா்குடி, அக். 13-  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் ரூ.45 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.  நேரு ஞாயிறன்று திறந்து வைத்தார்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோக னச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவுக்கு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலை வகித்தார். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் மன்னை த.சோழராஜன், நகராட்சி ஆணையர் (பொ) போ.வி. சுரேந்திர ஷா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.