tamilnadu

img

கரூர், பெரம்பலூரில் ரூ. 5,000 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலைகள்

கரூர், பெரம்பலூரில் ரூ. 5,000 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலைகள்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங் களில் ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில்  தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்களை நிறுவ, ‘எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் மற்றும் தமிழக அரசு’ இடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனம் தான் எவர்வான் கோத்தாரி புட்வேர் லிமிடெட் நிறுவனம்  ஆகும். இந்த நிறுவனம், கரூர் மற்றும்  பெரம்பலூர் மாவட்டங்களில், ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கும்  காலணி தொழிற்சாலை மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, தமிழக அரசின் முதலீட்டு  ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் எவர்ன் கோத்தாரி புட்வேர் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.  சென்னை தலைமைச் செயல கத்தில் தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்  நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலை மைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில் துறை செயலர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர் தரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன்  குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரபீக்  அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.