tamilnadu

ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்பிலிருந்து வெளியேற்றத் தடை

சென்னை, டிச.4- ஏர் இந்தியா ஊழியர்களை குடி யிருப்பிலிருந்து வெளியேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது, மேலும், அமைச்ச கத்துக்கும் டாடா குழுமத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ஊழியர்களின் வாழ்வாதாரம், அவர்களது கோரிக்கைகள், ஒய்வூதி யம், தற்போதைய பணியாளர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் பற்றிக் கவலைப்படாமல் தொழி லாளர்கள் நலனில் அக்கறையின்றி ஏர் இந்தியா நிறுவனம் அதன் பங்கு களை 100 சதவீதம் விற்கும் பணி யில் ஈடுபட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டுமென ஏர்-இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.  

ஏர் இந்தியா லிமிடெட் நிறு வனத்தில் பணியாற்றும் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் ஏர் கார்ப்ப ரேஷன் ஊழியர் சங்கம் சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில், பணியாளர் களின் நிலைமை, பிற உரிமை களைப் பாதுகாப்பதற்காக தொழிற் சங்கத்துடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். அது வரை ஏர் இந்தியாவின் பங்குகளை, டாலஸ் நிறுவனத்திடம் விற்பதை தடை செய்ய வேண்டும். குறிப்பாக ஊழியர்களை அவர்களது குடி யிருப்புகளில் இருந்து வெளி யேற்றக் கூடாது. அவர்களின் மருத் துவ வசதிகளை நிறுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. வழக்கறிஞர் வைகை இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. விமான நிலைய ஊழியர்கள் சங்கம் சார் பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை வாதாடினார். இதையடுத்து உத்தரவு பிறப் பித்த நீதிபதி வி.பார்த்திபன், வழக்க றிஞர் வைகையின் கோரிக்கையை ஏற்று, ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவதற்கும்,தற்போதுள்ள மருத்துவ வசதிகளை நிறுத்து வதற்கும் அதிகாரிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

அமைச்சகத்துக்கு நோட்டீஸ்

ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்ச கம், ஏர் இந்தியா லிமிடெட் (ஏஐஎல்) மற்றும் ஏர் இந்தியாவை கையகப்படுத்த டாடா குழு மத்தால் நிறுவப்பட்ட டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அடுத்த விசாரணையில் ஒன்றிய அரசு பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கர நாராயணனை நீதிபதி கேட்டுக் கொண்டார். தொழிற்சங்கத்திற்கு புதுதில்லியில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம், சென்னை யில் மண்டல அலுவலகம் உள்ளதாக அதன் தலைவர் சி.உதயசங்கர் குறிப்பிட்டுள்ளார். ஏர் கார்ப்பரேசன் ஊழியர் சங்கம் ஏர் இந்தி யாவின் மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம். இந்த தொழிற்சங்கத்தில் கேபின் க்ரூ, விமான உபகரண ஆப ரேட்டர்கள், ஓட்டுநர்கள், பயிற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், பியூன்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு ஊழி யர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர்.

ஏர் இந்தியாவின் நிர்வாகம், ஊதிய அமைப்பு, சேவை நிலைமைகள், நிறுவனத் தின் வழக்கமான நிர்வாகமற்ற ஊழியர்க ளின் நலன்களைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பாக தொழிற்சங்கத்து டன் கலந்தாலோசிக்க வேண்டும்.  ஏர் இந்தியா இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனம். அதன் பங்குகளை 100 சதவீதம் விலக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியாவில் பணி யாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களை பாது காப்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
 

 

;