வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனே திரும்பப் பெறுக!
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 27 - மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சி நாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மாநிலப் பொதுச் செய லாளர் ச.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடந்த மாதம் அலுவல் ரீதியான புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனு சமூக வலைதளத்தில் பகிரப் பட்டு இருக்கிறது. தலைமை நீதிபதிக்கு அனுப்பப் பட்ட புகார் மனு, பொது வெளிக்கு எப்படி வந்தது என்கிற ஐயம் எழுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சி நாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன் மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம் சாட்டி, அதற் காக வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப் போவதாக கூறியுள்ளார். நீதிபதிகளின் முறைகேடான நடவடிக்கை குறித்து அல்லது அவர்களின் தீர்ப்புகளில் முறை கேடுகள் நடந்து இருந்தாலும் எந்த ஒரு வழக்கறி ஞரும், குடிமக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு புகார் அளிக்க உரிமை இருக்கிறது. அப்படி வரக் கூடிய புகார்கள் மீது உள்விசாரணை நடத்தி, உண்மையை கண்டறிய உச்ச நீதிமன்ற நீதி பதிக்கு அதிகாரம் இருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் புகார் நிலுவை யில் உள்ள நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் தன் மீது புகார் அளித்த வழக்கறிஞர் வாஞ்சி நாதனை நீதிமன்றத்திற்கு அழைத்து நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்து இருப்பது சட்டத் திற்கும் இயற்கை நீதிக்கும் எதிரானதாகும். புகாரில் சம்பந்தப்பட்ட நீதிபதியே, புகார் அளித்த வரை அழைத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வது நீதிபரிபாலன முறையின் மீது மக்க ளுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையாது. நீதிமன்ற அவமதிப்பு என்கிற சட்ட நடைமுறை பல நாடுகளில் கைவிடப்பட்டுள்ள நிலையில், அதை இன்னும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி நீதி மன்ற தீர்ப்புகள், நடவடிக்கைகள் மீது கருத்து சொல்வோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது பேச்சுரிமை, எழுத்துரிமைகளை நசுக்குவதாக அமைந்துவிடும். இந்த அவதூறு வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் இந்த அநீதிக்கு எதிராக ஓய்வுபெற்ற எட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜாக் (JAAC) மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாத னின் நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்திருக் கிறார்கள். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடுத்திருக்கும் அவ மதிப்பிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறி ஞர்கள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்த வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.