போக்குவரத்துக்கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற அழைப்பு
நாகர்கோவில்,அக்.4- அரசு போக்குவரத்துக்கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக் fப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல் வேலி) லிமிடெட், நாகர்கோவில் மண்டலத்தில் பட்டம், பட்டயம் மற்றும் கலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் 2025-2026- ஆம் ஆண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான இயந்திரவியல்/ஆட்டோ மொபைல் பிரிவுகளில் பொறியியல் பட்டம், பட்டயம் மற்றும் கலை 2021, 2022, 2023, 2024 2025-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் https://nats.education.gov.in 18.10.2025-க்குள் தகு தியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
குடிநீர் என நினைத்து கொசு மருந்தை குடித்தவருக்கு சிகிச்சை
நாகர்கோவில், அக். 4- நாகர்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை க்கு சென்ற நபர் குடிநீர் என நினைத்து கொசுமருந்தை குடித்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு பாஸ்கர் என்ற நபர் சிகிச்சைக்கு சென்றார். அப்போது தண்ணீர் என நினைத்து அங்கிருந்த கொசு மருந்தை குடித்தார்.இதனையடுத்து அவரை உடன டியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையளித்து வருகின்றனர்.
பேச்சிப்பாறை அரசு கல்லூரியில் தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை
நாகர்கோவில்,அக்.4- பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெறுகிறது என்று கன்னி யாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக் கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வரு கிறது. BC - 16 , BCM - 3 & SCA - 1 ஆகிய காலியிடங் கள் உள்ளன. பேச்சிப்பாறை அரசு பள்ளி மற்றும் விவசாய கல்லூரியில் உடனடி சேர்க்கைக்கு நேரில் வரவும். அசல் சான்றிதழ்கள் மற்றும் கவுன்சிலிங் கட்டணம் ரூ.5400- மட்டுமே கொண்டுவந்தால் போதுமானது. முதலாம் ஆண்டு மொத்த கட்டணம் ரூ.11000- இரண்டு ஆண்டுகள் படித்து முடித்தவுடன் அக்ரிகல்சர் அசிஸ்டெண்ட் தேர்வு எழுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அக்ரி கல்சர் அலுவலகங்களில் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு பழபண்ணை நர்சரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் வேலை பெறலாம். பல்வேறு தனியார் நிறு வனங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். சுயதொழில் தொடங்கவும் விவசாய கடன் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வேளாண்மை சார்ந்த அலுவலகங்களிலும் ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏரா ளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி அட்மிஷன் பெறுமாறும், இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அட்மிஷன் தொடர்பான விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரி முதல்வர்: 94424 50976, பேச்சிப்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 9486447128, 94898 27527. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகு மீனா
தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்கள் மோதல் பெண் காவலர் படுகாயம்
தென்காசி, அக். 4- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சுரண்டை காவல் நிலைய பெண் காவலர் படு காயமடைந்தார். பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பகுதி யைச் சேர்ந்தவர் கார்த்திக் என்பவரின் மனைவி அன்பரசி (34). இவர் சுரண்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். அக்டோபர் 4 அன்று பெண் காவ லர் அன்பரசி வழக்கம்போல் ஆவுடையானூரிலிருந்து கீழப்பாவூர் வழியாக சுரண்டை காவல் நிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழப்பாவூர் எஸ்.கே. ஆர்.தெருவை சேர்ந்த காசி என்பவரது மகன் மணிகண்டன் (38) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பெண் காவலர் அன்பரசி ஓட்டி வந்த வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் பெண் காவ லர் அன்பரசி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனுமதி இல்லாத துப்பாக்கிகள் வைத்திருப்போர் நவ.30-க்குள் ஒப்படைக்க உத்தரவு
தென்காசி, அக். 4- அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவம்பர் 30 ஆம் தேதி வரை காலக் கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ரா.ராஜ் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு : தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவா ரப்பகுதி வனம் மற்றும் வனவிலங்குகள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கை நமக்கு அளித்துள்ள வனவளங்களையும், வன விலங்குகளையும் காப்பது இந்திய அரசியல் சாச னத்தின் படி அடிப்படை கட மையாகும். எனவே, வன விலங்குகள் வேட்டையா டுதலை தடுக்கும்பொருட்டு அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் மற்றம் வன விலங்கு வேட்டையில் ஈடு படும் நபர்களை கண்டறியும் புலனாய்வு பணி நடைபெற்றுவருகிறது. அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவம்பர் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு வுக்குள் தென்காசி மாவட் டத்தில் தங்கள் அருகிலுள்ள வனச்சரக அலுவலர்களிடம் சட்ட நடவடிக்கை ஏதுமின்றி துப்பாக்கி ஒப்படைப்பு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ் வாய்ப்பில் அனுமதி பெற்ற துப்பாக்கியையும் அரசிடம் திரும்ப ஒப்ப டைக்க விரும்பும் நபர்கள் ஒப்படைக்கலாம். மேலும், வன உயிரின பதப்படுத் தப்பட்ட பொருட்கள், கொம்புகள், நகங்கள், பல், தோல் மற்றும் வனவிலங்கு தொடர்பான அனைத்து பொருட்களையும் தானாக முன் வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் வழக்குகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப் படும். மேற்படி வாய்ப்பினை தகுதியுள்ள நபர்கள் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள்படு கிறார்கள். மேலும் விபரங்களுக்கு, tenkasidfo@gmail.com என்ற இணையதள முகவரி யிலும், மாவட்ட வன அலு வலக கட்டுப்பாட்டு அறை எண்-04633233550, சிவகிரி- 04636298523, புளியங் குடி-04636235853, கடைய நல்லூர் -04633210700, குற்றா லம்-04633298190, தென்காசி -04633233660, ஆலங்குளம் – 04633293855 ஆகிய எண்களி லும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏவின் ஓட்டுநரை தாக்கிய 4 பேர் கைது
தென்காசி, அக். 4- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா வெங்கடாம்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர் ஆலங்குளம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் மனோஜ்பாண்டியனிடம் கார் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மதியம் முருகனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இசக்கி, சங்கரலிங்கம், செல்வகுமார், மகாராஜா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.