15 தொகுதிகளில் மோசடி இல்லாவிடில் மோடி இன்று பிரதமரே அல்ல!
அதிர்ச்சிகரமான ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்
புதுதில்லி, ஆக.7 – இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையையே உலுக் கும் அளவிற்கு தேர்தல் மோசடி குறித்த ஆதாரங் களை வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள் ளார் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி. தில்லியில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப் பில், 2024 மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடந்த மிகப் பெரிய முறைகேடுகளை டிஜிட்டல் திரை வழியாக புள்ளிவிவரங்களுடன் ராகுல் அம்பலப்படுத்தி யுள்ளார். கர்நாடகத்தின் மகாதேவபுரா அதிர்ச்சி கர்நாடகத்தில் மகாதேவ புரா தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்ட தர வுகள் அதிர்ச்சி அளிக்கின் றன. இதில் 11,965 பேர் போலி வாக்காளர்கள், 40,009 பேர் போலி முகவரி வாக்காளர்கள், 4,132 பேர் போலி புகைப்பட வாக்கா ளர்கள், 33,692 பேர் படிவம் 6 முறைகேடு வாக்காளர்கள் என்று விவரித்தார். பெங்களூரு மத்தியிலும் பெரிய மோசடி கர்நாடகத்தில் காங்கி ரஸ் 16 இடங்களில் வெல்லும் என்று உள்கருத்துக்கணிப்பு கூறிய நிலையில் 9 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றது. பெங்களூரு மத்திய தொகுதியில் பாஜக 6,58,915 வாக்குகள் பெற்று 32,707 வாக்குகள் வித்தியா சத்தில் வென்றது. ஆனால், மகாதேவபுரா தொகுதியில் மட்டும் பாஜக 2,29,632 வாக்குகளைப் பெற்று, காங்கிரசை 1,14,046 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு மோசடி யாக விழுந்த 1,00,250 வாக்கு களே காரணம் என்று ராகுல் சுட்டிக்காட்டினார். மிக அதிர்ச்சியூட்டும் வகையில், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்கா ளர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், குர்கிராத் சிங் டாங் என்ற ஒருவரின் பெயர் 4 வேறுபட்ட வாக்குச் சாவடிகளில் இருப்பதாக வும் தெரிவித்தார். ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற வாக்கா ளர் கர்நாடகம், உத்தரபிர தேசம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பதிவாகியுள்ளார். ஹரியானாவில் குறுகிய தோல்வி ஹரியானாவில் 8 தொகுதிகளிலும் சேர்த்தே காங்கிரஸ் மொத்தம் 22,779 வாக்குகள் வித்தியாசத்தில்