tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘நிச்சயம் நிறைவேற்றுவேன்’

சென்னை: “சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு நான் இசை யமைத்து ஆல்பங்களாக வெளியிட வேண்டும் என்ற முத லமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவேன்”என்று உறுதியளித்திருக்கும் இசை ஞானி இளையராஜா, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்திய தற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை  இயல்பை விட அதிகமாக பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வா ளர்கள் கணித்துள்ளனர்.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பாக 44 செ.மீ.  மழை பதிவாகும். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை முறையே 33.7 செ.மீ., 45.4 செ.மீ.,  47.7 செ.மீ., 71.4 செ.மீ., 44.5 செ.மீ., 45.8 செ.மீ., 58.9 செ.மீ.  என மழை பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டைத் தவிர  மற்ற ஆண்டுகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய் துள்ளது. நடப்பாண்டு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தனியார் வானிலை ஆய்வா ளர்கள் முன்கணிப்பு வெளியிட்டுள்ளனர். தாழ்வுப்பகுதி, மண்டலம், புயல் என அடுத்தடுத்த நிகழ்வு களால் மழை தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக நவம்பர்  பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள்  உருவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல்  சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து மழையை வழங்குவதற்கும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் இயல்புக்கு அதிகமாக மழை பதிவா வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

ரூ.1.91 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவு

கடலூர்: கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் கப்பல் அதிகாரி  விமல். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று, கட லூர் செல்லங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் தனது சகோதரி தென்ற லுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதி வேகமாக வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  விமல் மற்றும் அவரது சகோதரி தென்றல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு கோரி கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்.1-ல் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இறந்த  விமல் குடும்பத்தினருக்கு ரூ.1.62 கோடி வழங்க முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமல் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தேசிய மக்கள்  நீதிமன்றம் ரூ.1.91 கோடி வட்டித் தொகையுடன் நஷ்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு வழங்கியுள்ளது.

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தசரா, தீபாவளியையொட்டி மைசூருவில்  இருந்து நெல்லை, காரைக்குடி மற்றும் இராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தசரா, தீபாவளி கூட்ட  நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, செப்.15 முதல் நவம்பர் 24  ஆம் தேதி வரை மைசூருவில் இருந்து நெல்லைக்கும், செப்.18-இல் இருந்து நவ.29 ஆம் தேதி வரை மைசூருவில் இருந்து காரைக்குடிக்கும், செப்.15 முதல் அக்.27 ஆம் தேதி  வரை மைசூருவில் இருந்து இராமநாதபுரத்துக்கும் வாராந்திர  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

‘இப்போதைக்கு முடியவில்லை’

சென்னை: “ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு சட்டம் இயற்றி  அனுப்பினோம். அதை ஆளுநர் மூலம் என்னென்ன சூழ்ச்சி கள் செய்து ஒன்றிய பாஜக அரசு தடுத்தது என்பது தமிழ்நாட்டு  மக்களுக்கு நன்றாகத் தெரியும். அப்போதும் கடுமையான சட்டப்  போராட்டம் நடத்தினோம். அதிமுகவைப் போல் மறைத்து வைத்து நாடகம் ஆடவில்லை. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு  வந்தால் நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி  அளித்துள்ளார். நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறுக்க வில்லை; இருப்பினும், அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்காமல் இருக்கவில்லை. நிச்சயம் நம் மாநில உரிமை களை காக்கும் அரசு ஒன்றியத்தில் அமையும்” என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள ஏழை - எளிய குழந்தை கள் படிக்க வேண்டும் என கலைக் கல்லூரியை தொடங்கினால், இந்துசமய அறநிலையத்துறை நிதியை ஏன் பயன்படுத்தினீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். அதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால், இந்த நிதி மக்களுக்குத்தான் சொந்தம் என கூறி வழக்கை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அறநிலையத் துறை நிதியில் மணமக்களுக்கு எப்படி திருமணம் நடத்து வீர்கள்? என கேட்டாலும் கேட்பார். ஏனென்றால், திமுக அரசின் சாதனைகள் அவர்களின் கண்களை உறுத்துகிறது” என்று இந்து சமய அறநிலையத் துறையின், சென்னை மாவட்ட கோவில்கள்  சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

90 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 90 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

‘மணிப்பூர் மக்களை  விலைக்கு வாங்க முடியுமா?’

சென்னை: முன் னாள் ஒன்றிய அமைச்ச ரும், காங்கிரஸ் மூத்த  தலைவருமான ப.சிதம் பரம் தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “2023  ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 258 பேர் உயிரிழந்தனர்; 1,108 பேர் காயமடைந்தனர்; 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன; 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்; பல்லாயி ரம் பேர் அகதிகள் முகாம் களில் இன்றும் இருக் கின்றனர். இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும் பிக் கூடப் பார்க்கவில்லை. சனிக்கிழமை மணிப்பூர் சென்ற மோடி, ஒரு வார்த்தைகூட வருத்தம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ.7300 கோடி திட்டங்கள், ரூ.1200  கோடி திட்டங்கள் என்று  கூறி மணிப்பூர் மக்களை  விலைக்கு வாங்க முடி யுமா?” என வினவி யுள்ளார்.

அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: திருச்சி யில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த  விஜய் ரசிகர்கள் அரசு  சையது முர்துசா பள்ளி யின் மேற்கூரையை உடைத்து, கழிவறையை வீணடித்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், “கும்பலா வாங்க.. எஞ்சாய்  பண்ணுங்க.. எண்டர் டெயின்மெண்ட் பாருங்க.. ஹாப்பியா இருங்க.. ஆனா மக்கள் வரிப்பணத் தில் கட்டப்பட்ட பொது சொத்துக்களை சேதப் படுத்தாதீங்க” என்று அறி வுரை வழங்கியுள்ளார்.

வைத்து  வெற்றியை கணிக்க முடியாது!

கோவை: “கூட்டம் கூடு வதை வைத்து தேர்தல் வெற்றியை கணிக்க முடி யாது என்றும், திமுக கூட்டணி வெற்றியில் தவெக எந்த பாதிப்பையும்  ஏற்படுத்த முடியாது” என்றும் விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோ வையில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.