tamilnadu

img

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் சோதனைக்காக தில்லி புறப்பட்டது

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் சோதனைக்காக தில்லி புறப்பட்டது

சென்னை, ஆக.23 - சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கி ணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட  மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கியது. ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு பணிகள்  முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை ஐசிஎப்-பில்  தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின்  பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொள் வதற்காக சனிக்கிழமை (ஆக.23) தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரியானாவின் சோனிபட்டில் இருந்து ஜிந்த் வரை ஹைட்ர ஜன் ரயில் என்ஜின் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.