சென்னை,ஜூலை 23- மாமல்லபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர், நடுவர்கள், செஸ் கூட்டமைப்பினர் என 3 ஆயிரம் பேர் வருகிறார்கள். ஜூலை 23 ஆம் தேதி முதல் வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார். இந்த நிலையில் ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் உள்ளிட்ட சில வெளி நாட்டவர்களும் ‘செஸ் ஒலிம்பி யாட்’ நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் வெளிநாட்டு வீரர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் போர்டு, இணையதள வசதி, அரங்கத்தின் குளிர் அளவு, மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற் பாடு, பயணம் செய்யும் வாகனம், நிறுத்தும் இடங்கள், சி.சி.டி.வி கேமரா பகுதிகள், உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரம் அமைப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் குறித்து இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், செஸ் விளை யாட்டு வீரர்கள் சென்னை வரத் தொடங்கினார்கள். முதன் முதலாக ஆஸ்திரேலியாவிலிருந்து 4 வீரர்களும், அங்கேரியாவை சேர்ந்த 2 வீரர்களும் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த வெளிநாட்டு வீரர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, பாதுகாப் பாக அழைத்து செல்லப்பட்டனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 28 ஆம் தேதி நடை பெறும் அணி வகுப்பு பகுதிகளை பார்வையிட்டு அதற்கு தயாராக உள்ளனர். அந்தந்த நாடுகளில் பயண நேரத்திற்கு ஏற்ப, வரும் 27 ஆம் தேதிக்குள் அனைத்து நாட்டு வீரர்கள் வர உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையம், வீரர் கள் தங்கும் ஓட்டல், சென்னை நேரு விளையாட்டு அரங்கம், மாமல்லபு ரம் போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.