திருவாரூர் அருகே பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு
திருவாரூர், ஜூலை 14- திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற சமூக விரோதிகள், அங்குள்ள சமையல் பொருட்களைக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த இறைச்சியை சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி அட்டூழியம் செய்துள்ள னர். சமையல்பொருட்களை திருடியும் சேதப்படுத்தி யுள்ளனர். பள்ளி மாண வர்கள் பயன்படுத்தும் இடுப்பளவு உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கழித்துள்ளனர். பின்னர் குடிநீர் குழாயை உடைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படு கிறது. திங்கட்கிழமை காலை மாணவர்களுக்கு உணவு சமைக்க வந்த ஊழியர்கள், பள்ளி சமையல றையில் உணவுப் பொருட் கள் அலங்கோலமாக கிடப்பதை அறிந்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறையின ருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்து வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் மோப்ப நாயை வரவழை த்து விசாரணை மேற்கொ ண்டனர். மோப்பநாய் விசார ணையில் பிடிபட்ட குற்ற வாளிகள் 3 பேரும் தாங்கள் செய்த அட்டூழியத்தை ஒப்புக்கொண்டனர். இதில் காரியாங்குடி மெயின் ரோட்டில் வசிக்கும் விஜ யராஜ் மற்றும் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில், காளி தாஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மேலும் இரு நபர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த முதன்மை கல்வி அலு வலர், பழைய குடிநீர் தொட்டி யை அகற்றிவிட்டு புதிய குடி நீர் தொட்டிவைக்கும் பணி யை மேற்கொண்டார். பள்ளி வழக்கம் போல் செயல்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு நேரில் ஆய்வுக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தெரிவிக்கையில்,”இது மோசமான சம்பவம் ஆகும். அனைத்து பள்ளிக்கும் இரவு காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயலைச் செய்த சமூக விரோதிகள்மீது, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இனி ஒருபோதும் இது மாதிரி மோசமான சம்பவம் நடைபெறாமல் செய்ய வேண்டும்’’ என்றார். ஆய்வின் போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தர மூர்த்தி, பா.கோமதி, கே.பி. ஜோதிபாசு, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, வாலி பர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. இளைய ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.எஸ். கோசிமணி, சிபிஎம் தப்பளாம்புலியூர் கிளைச் செயலாளர் எஸ். கார்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந் தனர்.