லைவ் புகைப்படங்களை ஐபோனில் வீடியோக்களாக மாற்றுவது எளிதானது. இதன் மூலம், நம்முடைய சிறந்த தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். லைவ் புகைப்படங்களை வீடியோவாக மாற்றுவது எப்படி என்று காணலாம். 1) உங்கள் ஐபோனில் உள்ள போட்டோ செயலியை திறந்து, திரையின் கீழே உள்ள Album ஐகானை கிளிக் செய்யவும். 2) மீடியா டைப்ஸ் (Media Types) ஆப்ஷனில் Live Photos என்பதை கிளிக் செய்து, தேவைப்படும் லைவ் புகைப்படங்களை தேர்வு செய்யவும். 3) பழைய வெர்ஷனில் கீழ் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட வட்ட ஐகானை கிளிக் செய்யவும். அதில் வரும் பாப்-அப் மெனுவில் வீடியோவாக சேமி (Save as Video) என்பதைத் தேர்வு செய்யவும். 4) புதிய வேர்ஷனில் கீழ் வலது மூலையில் கொடுக்கப்பட்டுள்ள Share ஆப்ஷனை கிளிக் செய்து Save as Video என்பதைத் தேர்வு செய்யவும். இதன் மூலம் உங்கள் லைவ் புகைப்படங்களை வீடியோக்களாக மாற்றிக்கொள்ளலாம்.