tamilnadu

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை

சென்னை,ஜன.11- அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து,  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடு கள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளன. அதன்படி, வருகிற 14 ஆம்  தேதி முதல் 18 ஆம் தேதி வரைக்கும் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் மூடப் படும். ஜன.16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் வெளியூர் செல்வதை கருத்தில் கொண்டு பேருந்துகளில் 75 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மேலும், வருகிற 31 ஆம் தேதி  வரைக்கும் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ள கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்றும் அறிவித்தார். இதனையடுத்து 1 முதல் 9 வரையி லான வகுப்புகளுக்கு வரும் 31 ஆம்  தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவ தாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து ள்ளது.  1 முதல் 9 வரையிலான வகுப்புக ளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலை க்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது த்தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  அனைத்து பிஇ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.