tamilnadu

img

கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை, செப். 2 - சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 189-ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5-ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம்  மாநகராட்சி 40-ஆவது வார்டு கவுன்சில ரும் மண்டலக்குழுத் தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சித் தலை வரும் 11-ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை, அதிகார துஷ்பிரயோ கம் செய்ததாக கூறி, நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலா ளர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித் திருந்தார். இதனை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி யாக மனு தாக்கல் செய்திருந்தனர். பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு  அனுப்பிய நோட்டீஸுக்கு தங்கள் தரப்பில் விரிவான பதில் அளிக்கப்பட்ட தாகவும், ஆனால், அரசு அவற்றை பரிசீலிக்க வில்லை  என்றும் வாதிடப்பட்டது. நீதிபதி என். மாலா இந்த வழக்குகளை விசாரித்தார்.  அப் போது, நோட் டீ ஸுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை எந்த காரணமும் தெரிவிக்கா மல் அரசு நிரா கரித்துள்ள தாகவும், விளக்கம் அளிக்க அவகாசம்  வழங்கப்படவில்லை என்றும் கூறி நான்கு  பேரையும் பதவி நீக்கம் செய்த உத்தர வுகளை ரத்து செய்து உத்தரவிட்டார். அவர்களின் பதிலை பரிசீலித்து, விளக்க மளிக்க அவகாசம் வழங்கி, சட்டப்படி நான்கு  வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க  வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.