tamilnadu

கரூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கரூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கம் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கரூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்களை நீக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டப் பேரவைக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தல்  நடைபெற உள்ள நிலையில், கரூர் தொகுதி வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களையும், போலி வாக்காளர்களின் பெயர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என விஜயபாஸ்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். “போலி வாக்காளர்களையும், இறந்த வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்காவிட்டால் அது தேர்தல் முடிவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, கள்ள  ஓட்டு போடுவதற்கு வழிவகை செய்யும்” என அவர் குறிப்பிட் டுள்ளார். இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி  வைத்துள்ளது.