tamilnadu

img

யானை பேச்சு கேட்க வா! - சேதுசிவன்

ஹாய் குட்டீஸ். இந்த வாரம் ஒரு அழகான அறிவியல் கண்டுபிடிப்பு ஒண்ணு வந்து இருக்கு தெரியுமா? நான் உங்களுக்கு சொல்றேன். நம்ம அம்மா நம்மல எப்படி கூப்டுவாங்க?  நம்மளோட பேர் இல்லாட்டி செல்லப்பேர் சொல்லி கூப்டுவாங்க. அந்த மாதிரி ஒரு விலங்கு இன்னோர் விலங்க பேர் சொல்லி கூப்பிட்டா எப்படி இருக்கும்? கேக்கவே ஜாலியா ஆச்சரியமா இருக்கும்ல. ஹாலிவுட் படத்துல வரமாதிரி செம்ம காமெடியாவும் இருக்கும்ல. இதெல்லாம் கேக்க ஆசையா தான் இருக்கு. ஆனா நடக்குமா? நடந்து இருக்கு குட்டீஸ். யானைகள் தங்களோட கூட்டத்துல இருக்க இன்னொரு யானையை பேர் சொல்லி கூப்டுதுன்னு ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு இந்த வாரம் வந்துருக்கு. இதுக்கு முன்னாடி டால்பின்கள் மற்றும் கிளிகள் அவங்களோட இனத்துல (கூட்டத்துல) இருக்க மற்ற டால்பின்கள் மற்றும் கிளிகளுடன் ஒலியைப் பிரதிபலிப்பதன் மூலம் ஒன்றுகொன்று பேசிக்கும். இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆனா இப்போ தான் முதல் முறையாக யானைகள் பெயர்களைப் பயன்படுத்தி அவங்க கூட்டத்துல உள்ள இன்னொரு யானையை கூப்டுறத கண்டுபிடிச்சி இருக்காங்க. ஆப்பிரிக்காவில் இருக்குற கென்யா நாட்டுல உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளை மைக்கேல் பார்டோ என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு செயற்கை நுண்ணறிவு வழிமுறையைப் பயன்படுத்தி ஆய்வு பண்ணதுல தான், இது தெரிய வந்து இருக்கு. பொதுவாகவே யானைகள் ரொம்ப பாசமா, புத்திசாலியா, பயங்கர ஞாபக சக்தி கொண்டதா இருக்கும். இந்த யானைகள் ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட சத்தத்தை பயன்படுத்துகின்றன. அந்த சத்தத்திற்கு சொந்தமான யானையும் அதற்கு பதில் சொல்லுற மாதிரி தலையை ஆட்டி பதில் சொல்லுது. இது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.  சரி இந்த விஷயத்தை புதுசா தெரிஞ்சுக்கிட்ட நீங்க, என்ன பண்ணப் போறீங்க ??? நீங்க இத உங்களோட நண்பர்கள்கிட்டயும், டீச்சர்கிட்டயும் சொல்லணும். இது மாதிரி புதிய கண்டு பிடிப்புகள் பத்தி நீங்க உங்க வகுப்பறையில பேசுனா அது எல்லாருக்கும் சயின்ஸ் மேலயும் புதிய கண்டுபிடிப்புகள் மேலயும் ஆர்வத்தை தூண்டும்.  அந்த நல்ல விஷயத்தை நீங்களும் பண்ணணும். சயின்ஸ் முக்கியம் பிகிலு...