வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் சூறைக்காற்றுடன் கனமழை வாழைகள் சாய்ந்து விவசாயிகளுக்கு ரூ.2 கோடி இழப்பு
திருநெல்வேலி, அக்.4- நெல்லை மாவட்டம் வீரவ நல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்று வட்டார பகுதிகளில் அக்டோ பர் 3 வெள்ளியன்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழைபெய்தது.இதில் 100 ஏக்கரில் சுமார் ஒரு லட்சம் வாழைகள் சாய்ந்து நாச மடைந்தன. வீரவநல்லூர் சுற்று வட்டார பகுதிகளான கிரியம்மாள்புரம், உதய மார்த்தாண்டபுரம், சக்தி குளம், கூனி யூர், காருகுறிச்சி, பொ ழிக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 110 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சம் குலை தள்ளிய வாழை கள் முறிந்து விழுந்து நாசமானது. இதனைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடை ந்தனர். இதன் சேதமதிப்பு ரூ.2 கோடி க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட ப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு இதுபோல் பலத்த சூறைக்காற்று வீசியதில் ஒரு லட்சம் வாழைகள் சேதமா யின. அதற்கே இன்னும் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராடியும், நிறை வேற்றப்படவில்லை என்றும் விவ சாயிகள் கூறுகின்றனர். போர்க்கால அடிப்படையில் இந்த ஆண்டாவது சேத மதிப்பை விரைவாக கணக்கிட்டு சூறைக்காற் றால் சேதம் அடைந்த வாழைக ளுக்கு இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்று விவசா யிகள் வலியுறுத்தியுள்ளனர்.
