வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆக.25 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், “தமிழக பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவ கங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும். வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆக.25 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்ப தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக.28 ஆம் தேதி வரை மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியு டன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறைக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதே போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.