பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல், செப்.2- நாமக்கல்லில் திங்க ளன்று மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத் தில், கடந்த சில தினங்க ளாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில் வானம் இருண்டு குளிர்ச்சியான காற்று வீசும் நிலையும் காணப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்நி லையில், திங்களன்று மாலை பரவலாக மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் பெய்த தொடர் மழையால், பரமத்தி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலையில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பெரும் இடையூராக இருந்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து மாநகராட்சிப் பணியாளர்கள், சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
