tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்தியாவின் முன்னாள் கால் gந்து வீரர் சுபாஷ் பௌமிக் ஜனவரி 22 அன்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 72. 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்  வெண் கலப்பதக்கம் வென்ற அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தவர்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பதிவின்போது ஒரே தொலைபேசி எண்ணில் ஆறு பேர்  வரை பதிவு செய்ய ஒன்றிய  அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

நாட்டில் இணைய வழி உணவு தானிய மேலாண்மையை வகைப்படுத்துவதற்கான திட்டத்தை ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இந்திய உணவு ஆணையத்தின் உதவியுடன் வடி வமைத்துள்ளது. மாநில அரசுகள் இந்த திட்டத்தின் கீழ் தங்களுக்கான ஒருங்கிணைந்த தகவல் மேலாண்மை இணையதளத்தை உருவாக்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டுள்ளது. 

உள்நாட்டு விமானப் பயணி கள் தங்களுடன் ஒரு கைப்பை யை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பராமரிப்புப் பணி காரண மாக குறிப்பிட்ட சில ரயில் சேவை களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங் களை அபகரித்தோர் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

லடாக்கில் நிலநடுக்கம் 

லடாக்,ஜன.22- லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 22 அன்று அதிகாலை திடீ ரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கி லுக்கு வடக்கே 169 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக் கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. ஆனால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.  

அரசு ஊழியர்  ஓய்வு வயது  62 ஆக உயர்வு

ஐதராபாத்,ஜன.22- ஆந்திராவில் அரசு ஊழி யர்கள் ஓய்வு வயதை 62 ஆக  உயர்த்த அந்த மாநில அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் புதிய ஊதிய ஆணைய பரிந்துரைகளை அமல் படுத்தவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. ஆந்திர அமைச்சரவை மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடை பெற்றது. இதில் அரசு ஊழியர்க ளின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த் துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆந்திராவில் புதிய ஊதிய ஆணைய பரிந்துரைகளை அமல் படுத்தினால் ஊழியர்களுக்கு இழப்பு ஏற்படும் எனக் கூறி தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.  திங்கள்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும்  பிப்ரவரி 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.  

 

;