tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதிகளவிலான கார்பன் மற்றும் மீத்தேன் நச்சு உமிழ்வு, அதிக வெப்பம் நிலவிய ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு 5  ஆவது இடத்தை பிடித்து ள்ளதாக ஐரோப்பிய ஒன் றியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் தடை யற்ற வர்த்தகம் மேற்கொள் வது தொடர்பாக பிரிட் டன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறது.

வீடுகளில் மின் பயன்பா ட்டை குறித்த காலத்தில் கணக்கெடுப்பதை உறுதி செய்யவும், முறை கேட்டை தடுக்கவும், கணக்கீட்டாளர்களுக்கு, ‘‘மொபைல் ஆப்” எனப் படும், மொபைல் போன் செயலியை, மின் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.

பள்ளி மாணவியருக்கு குழந்தை திருமணம் நடக் காமல் கண்காணிக்க வேண்டும் என்று முதன் மை கல்வி அலுவலர் களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. 

அரசு நலத்திட்ட உத விகள் அனைத்தையும் பெறுவதற்கு சம்பந்தப் பட்ட துறைகளுடன், ஆதார் விவரங்களை பகிர்வதற்கான அனுமதி அளிக்கும் ஒப்புதல் படிவத்தை, அனைத்து குடிமக்களுக்கும் ஒன்றிய அரசு விரைவில் அனுப்ப உள்ளது.