அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது ஹமாஸ் காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் ‘உத்தரவு’
காசா, செப். 4- இஸ்ரேல் - காசா போரை முடிவு க்குக் கொண்டு வருவதற்காக டிரம்ப் முன்வைத்த முன்மொழிவுகளில் சில வற்றை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் முன்மொழி வில் உள்ள சில அம்சங்கள் மீது பேச்சு வார்த்தைகள் தேவை எனவும் தெரி வித்துள்ளது. இந்தப் பின்னணியில், காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிடம் டிரம்ப் கூறியுள் ளார். இஸ்ரேல் - காசா போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் 20 அம்ச முன்மொழிவு களை வெளியிட்டார். இது பெரும் குழப்பங்களுடனும், உறுதியற்ற தாகவும் இருந்தது. அதாவது பாலஸ் தீனர்களின் மறுவாழ்வு திட்டம், காசா வை மறு கட்டமைப்பு செய்வது, மருத்துவம் உள்ளிட்ட மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண உத விகள் பற்றி உறுதியான தெளிவான திட்டங்கள் முன்மொழிவுகளில் இல்லை. குறிப்பாக பாலஸ்தீனர் களின் நியாயமான கோரிக்கைகள் எதையும் அந்த முன்மொழிவு பரிசீலிக்கவில்லை. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்காமல் ஒரு நிர்வாகக் குழுவை அமைத்து சர்வதேச கட்டுப் பாட்டில் நிர்வகிப்பது; சர்வதேச படை அங்கு நிறுத்தப்படும் வரை இஸ்ரேல் ராணுவமே இருக்கும்; சர்வதேச படை நிலை நிறுத்தப்பட்ட பிறகு காசாவிற்குள் ஒரு எல்லையோரப் பாதுகாப்புப் பகுதியை இஸ்ரேல் வைத்துக் கொள்ளக்கூடும்; அதாவது காசாவை சுற்றி இஸ்ரேல் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என மறைமுகமாக இஸ்ரேலுக்கு சாதக மானதாகவே டிரம்பின் முன்மொழி வுகள் இருந்தன. இதனால், டிரம்ப்பின் முன்மொழி வுகளை இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு வேகவேகமாக ஏற்றுக் கொண் டார். ஆனால், ஹமாஸ் அமைப்பு இந்த முன்மொழிவு மீது உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஓரிரு நாட் களுக்குப் பிறகு, டிரம்ப்பின் முன் மொழிவுகள் மீதான தனது நிலை பாட்டை ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதில், உயிருடன் மற்றும் சடல மாக உள்ள அனைத்து பணையக் கைதிகளையும் விடுவிக்கத் தயார். மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தயார். சர்வதேச அமைப்பின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கும் தயார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ‘போர்டு ஆஃப் பீஸ்’ என்ற சர்வதேச இடைக்கால நிர்வாக அமைப்பானது, காசாவை ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தில் இருந்தும் தனிமைப்படுத்தும் என்ற முன்மொழிவை ஹமாஸ் ஏற்க வில்லை. இதனிடையே, டிரம்ப் முன்வைத்த முன்மொழிவுகளில் சிலவற்றை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பேச்சு வார்த்தைக்கு தோதாக, காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலி டம் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், இஸ்ரேல் தற்போது வரை காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது.
