tamilnadu

img

துப்பாக்கி வன்முறையின் ஆதரவாளர் துப்பாக்கிக்கே பலி டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

துப்பாக்கி வன்முறையின் ஆதரவாளர் துப்பாக்கிக்கே பலி டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

வாஷிங்டன், செப். 11 - அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்த பழமைவாதியும், தீவிர வலதுசாரியும், டிரம்ப்பின் ஆதர வாளருமான சார்லி கிர்க் என்பவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் நிலவி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் ஆண்டு தோறும் பல நூறு மாணவ - மாணவியர் கொல்லப்படுகின்றனர். இதனால் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட  வேண்டும் என அங்குள்ள ஜனநாயக அமைப்புகள் வலியுறுத்தி வரு கின்றன. ஆனால், அமெரிக்கா ஆயுத  முதலாளிகளுக்காக துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ந்து தூண்டிவிடப் பட்டு வருகிறது.  அந்த வகையில், துப்பாக்கிக் கலாச்சா ரத்தை தீவிரமாக ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தவர் சார்லி கிர்க். துப்பாக்கி  வன்முறைகள் சரிதான் என்ற கருத்தைக்  கொண்ட இவர், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ நிறுவனத்தின் இணை நிறு வனராக உள்ளார். வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை மிக எளிமை யாக சந்திக்கும் வகையில், அவருடன் மிக நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தவர்.  இந்நிலையில் தான், உட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி வன்முறையை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு குடியரசுக் கட்சியும், ஜனநாயக கட்சியும் கண்ட னங்கள் தெரிவித்துள்ளன. டிரம்ப் இந்தச் சம்பவத்தை கண்டித்ததுடன் தனது ஆதரவாளரின் மரணத்தால் கடும் துன்ப மடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   இந்தப் படுகொலை சம்பவத்தை அடுத்து உட்டா பல்கலைக்கழகம் செப்டம்பர் 15 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.