ஜி.எஸ்.டி. கூடுதல் வரி விதிப்பை 5 சதவீதமாக குறைத்து காகித தொழிலை பாதுகாக்க வேண்டுகோள்!
இந்தியாவில் காகித உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த துணை தொழில்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை அளிக்கின்ற துறையாக உள்ளது. சமீப காலமாக ஒன்றிய அரசின் இறக்குமதி கொள்கை களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தாராளமய கொள்கை களின் விளைவாக தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் காகிதம், உள்நாட்டு காகித விலையை விட குறைவாக இருக்கிறது. இதன் விளைவாக காகித ஆலை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டு காலமாக லாபம் ஈட்டி வரும் புகலூரில் அமைந்துள்ள மாநில பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம் சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் கடும் நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையைத்தான் உள்நாட்டில் இயங்கும் பெரிய, சிறிய மற்றும் நடுத்தர காகித ஆலை உற்பத்தி நிறுவனங்களும் சந்திக்கின்றன. இந்தப் பின்னணியில், சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்கனவே காகிதத்திற்கு 12 சத வீதம் என்றிருந்த ஜிஎஸ்டி வரி, தற்போது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சில முடிக்கப்பட்ட காகித தயாரிப்பு களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. காகிதம் மற்றும் காகித அட்டைக்கு ஒரே சீரான 5 சதவீத வரியை முறைப்படுத்துவதுதான் காகிதம் சம்பந்த மான ஒட்டுமொத்த தொழிலையும் பாதுகாக்க உத வும். தற்போதைய சமச்சீரற்ற வரி விதிப்பால் ஏற் கனவே நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் காகித உற்பத்தி நிறுவனங்கள், மேலும் கடுமையான தொழில் நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூடுதல் வரிவிதிப்பால் தமிழ்நாட்டில் உள்ள பல சிறு காகித உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில் காலண்டர் தயா ரிப்பு, நாட்குறிப்பு தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் சிவகாசி அச்சு தொழில் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி உயர்வி னால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே ஒன்றிய அரசாங்கம் தற்போது காகித உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கணக்கில் கொண்டு, இந்த தொழிலை பாதுகாத்திட, இந்த தொழி லோடு சம்பந்தப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட காகிதம் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த துறைக் கும் சமச்சீரான வரி விதிப்பை கடைப்பிடிக்கக் கூடிய முறை யில், வரி விதிப்பை 5 சதவீதம் என முறைப்படுத்துவ தோடு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காகித அட்டைகளுக்கு செய்ததைப் போல அச்சு மற்றும் எழுதும் காகித இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இத்தொழிலை பாது காத்திட ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் தர முன்வர வேண்டும்.