காகிதத்திற்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உயர்வு
சிக்கலில் அச்சகத் தொழில்துறை
சிவகாசி, செப்.5- மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி அடுக்கில், காகிதத்திற்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அச்சகத் தொழிற்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏராளமான அச்சகங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் டைரிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் காலண்டர் தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்வது சிவகாசியே ஆகும். இத் தொழில்கள் ஆயிரக்கணக்கா னோருக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும், இதைச் சார்ந்து ஏராளமான உப தொழில்களும் வளர்ந்துள்ளன. இந்த நிலையில், வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 56வது ஆலோச னைக் கூட்டத்தில், காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். ஏற்கனவே, காலண்டர் மற்றும் டைரிக்கான ஆர்டர் களை எடுத்து உற்பத்தியை துவக்கி யுள்ள நிலையில், இந்த அறிவிப்பு, பெரும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக காலண்டர் மற்றும் டைரி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சிவகாசியைச் சேர்ந்த தமிழ்நாடு காலண்டர் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். “வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 56வது ஆலோசனைக் கூட்டத்தில், அத்தி யாவசியப் பொருட்களை 5 சதவீத த்திற்குள் கொண்டு வந்ததையும், கல்வி க்கான பயிற்சி, நோட்டு, புத்தகங் கள், மேப், சார்ட் போன்ற காகிதத்தா லான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறோம். அதே வேளை, காகிதத் திற்காக 12 சதவீத ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்த்திருந் தோம். மாறாக 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தின சரி, மாத நாட்காட்டி, டைரிகள் உள்ளி ட்ட காகிதத்தால் உருவாக்கப்படும் பொருட்களுக்கு 6 சதவிகிதம் கூடுத லாக விலை உயர்வு ஏற்படும். இந்த வரி உயர்வானது, காகிதத்தை மூல ப்பொருட்களாகக் கொண்டு இயங்கும் சிறு, குறு நிறுவனங்களையும் பாதிக் கும். எனவே, ஒன்றிய அரசு இதை பரி சீலிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.