tamilnadu

img

குரூப்-4 தேர்வு: திருவாரூர் ஆட்சியர் ஆய்வு

குரூப்-4 தேர்வு:  திருவாரூர் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர், ஜூலை 12-  திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு, தனியார் தேர்வு மையத்தில் வருவதை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு திருவாரூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், முத்துப்பேட்டை ஆகிய 8 மையங்களுக்குட்பட்ட 82 தேர்வறைகளில் நடைபெற்றது.  23,757 தேர்வர்கள் விண்ணப்பித்ததில், 20,241 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.