கூடுதல் காகித உற்பத்திக்கு, அரசுகள் உதவ வேண்டும்
எஸ்பிபி நிறுவனத் தலைவர் கோரிக்கை
உற்பத்திக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண் டும் என சேசசாயி காகித ஆலை நிறு வனத் தலைவர் எம்.கோபாலரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் இந்தியாவில் ஆக.1 ஆம் தேதி உலக காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நி லையில், நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சேசசாயி காகித ஆலையின் நிறுவனத் தலைவர் எம்.கோபாலரத்தினம் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் பேசுகையில், கடந்த 1940 ஆம் ஆண்டு ஆக.1 ஆம் தேதி மகாராஷ் டிரா மாநிலம், புனேவில் கையால் தயா ரிக்கப்படும் காகித நிறுவனம் தொடங் கப்பட்டது. இதில் இந்திய அரசியல மைப்பின் முதல் சில பிரதிகள் அச்சி டப்பட்டதாக கூறுகின்றனர். உலகின் காகித உற்பத்தியில் இந்தியா சுமார் 5 சதவிகிதம் அங்கம் வகிக்கிறது. காகிதத் தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 15 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கி றது. நமது நாட்டில் தனி நபர் காகிதம் நுகர்வு 15 கிலோவாக மட்டுமே உள் ளது. அதேநேரத்தில் உலக அளவில் சராசரி 57 கிலோவாக உள்ளது. இந்திய அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ் டிக்கை ஒழிக்க ஆர்வமாக உள்ளது. பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக காகித பைகள் மற்றும் உணவு தட்டுகள் உப யோகப்படுத்த கூறுகிறது. காகிதத்தின் பயன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த தன்மை பற்றிய விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக் கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சேசசாயி காகித ஆலை நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோனேசியா, சீனா உள் ளிட்ட நாடுகள் மிக மலிவான விலையில் காகிதங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூரில் உள்ள காகித ஆலை நிறு வனங்கள் போட்டியை சமாளிக்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவ தும் இதுவரையிலும் பயன்படுத்தப் படாத பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை காகிதம் தயாரிப்பதற்காக குத்தகை அடிப்ப டையில் வழங்கினால் இன்னும் மரங் கள் வளர்க்கப்பட்டு காகித உற்பத்தி அதி கரிக்கும். பசுமை புரட்சி, இயற்கை பாதுகாப்பு என்ற தொலைநோக்கு பார்வையுடன் மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவ வேண்டும். இயற்கையாக வள ரும் மரங்களை வெட்டி காகிதம் தயா ரிக்கப்படுவதாக ஒரு பேசுபொருள் உள்ளது. ஆனால், எதார்த்த நிலையில் நாங்கள் காகித தேவைக்காகவே தனி யார் நிலங்களில் எங்களுக்கு உரிய நிலங்களில் மரங்களை வளர்த்து அதன் மூலமாகவே காகித உற்பத்தியை செய்து வருகிறோம். உலகளாவிய வகையில் பல்வேறு சவால்கள் இருந் தாலும், தொடர்ந்து காகித உற்பத்தி பணியை மேற்கொண்டு வருகிறோம். சமீபத்தில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 81க்கும் அதிகமான மக்கள் மின்னணு ஊடகம், மொபைல் போன்றவற்றை காட்டிலும் காகிதத்தில் அதிகம் படிக்க விரும்புவதாக கூறப்பட் டுள்ளது. எதார்த்த உண்மையும் அது தான். எத்தனையோ சமூக ஊடகங்களி லும் நாம் எவ்வளவு பெரிய கருத்து களை படித்தாலும் அது காகிதத்தில் படிப்பது போன்ற உணர்வை தராது. எத்தனை நவீன வளர்ச்சிகள் வந்தாலும் கால சூழல்கள் மாறினாலும், காகிதத் தின் பயன்பாடு மேலும் மேலும் பல் வேறு பரிமாணங்களில் அதிகரிக்கிறது தவிர, குறையப்போவதில்லை. காகித உற்பத்தி அதொழிலில் உள்ள சவால் களை தொடர்ந்து சந்தித்து, அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டுள் ளோம், என்றார்.