tamilnadu

img

ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பயன்கள் அனைத்தும் வழங்கிடுக!

சேலம், மார்ச் 25- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாள் அன்றே அனைத்து பண  பலன்களையும் வழங்க வேண்டும் என ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் 6 ஆவது மாநில  மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 6-ஆவது மாநில மாநாடு சேலம் கே.எம்.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.  சந்திரன் கொடியேற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை நிர்வாகி கே. வீரராகவன் முன்மொழிந்தார். வரவேற்பு குழு தலைவர் டி.உதயகுமார் வரவேற்பு உரையாற்றினார். மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளனத்தின் தலைவர் டி. துரைப்பாண்டியன் துவக்க உரையாற்றி னார். மாநாட்டில், மாநில பொதுச் செயலா ளர் கே.கர்சன் மற்றும் மாநில பொருளாளர் எ.வரதராஜன் ஆகியோர் வேலை அறிக்கை,  வரவு செலவு அறிக்கைகளை முன்மொழிந்த னர். ஒன்றிய, மாநில பொதுத்துறை ஓய்வூதி யர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி டி.நேதாஜி சுபாஷ்  மாநாட்டை வாழ்த்தி உரையாற்றி னார்.  இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும். போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு ஓய்வு பெறும் நாள் அன்று அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும், டிஏ, அரியர்ஸ் முறையாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கு முறையாக மேம்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.  இரண்டாவது நாளாக ஞாயிறன்று நடை பெற உள்ள மாநாட்டில், புதிய நிர்வாகிகள்  தேர்வு மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளது.

;