அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்சிராப்பள்ளி, செப். 11- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில், போக்குவரத்து ஊழியர்கள், திருச்சி புறநகர் கிளை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 25 ஆவது நாளான வியாழனன்று நடந்த போராட்டத்திற்கு, டி.என்.எஸ்.டி.சி திருச்சி - கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை தாங்கினார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். போராட்டத்தை விளக்கி டி.என்.எஸ்.டி.சி. திருச்சி, கரூர் மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், பொருளாளர் முத்துக்குமார், எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சிவானந்தம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.