tamilnadu

img

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு  ரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்  குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை

கும்பகோணம், செப். 11-  கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது  குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், விஜயலட்சுமி தலைமை வகித்தனர். கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். படித்து விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் தங்களது குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை ஒன்றிய அதிகாரிகளிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உரிய தீர்வு காணப்படும் என்றார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் துரை.கார்த்திகேயன் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.