ஆக.5 சானடோரியத்தில் அரசு மருத்துவமனை திறப்பு
சென்னை, ஜூலை 24- தாம்பரம் சானடோரியத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை ஆக.5ல் முதல்வர் திறந்து வைக்கிறார் தாம்பரம் சானடோரிய வளாகத்தில் ரூ.110 கோடியில் 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆகஸ்ட் 5ம்தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், படுக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பூக்களின் விலை மீண்டும் உயர்வு சென்னை, ஜூலை 24- ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் புதனன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.400லிருந்து ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், முல்லை ரூ.250ல் இருந்து ரூ.300க்கும், ஜாதிமல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.600க்கும், அரளி ரூ.150ல் இருந்து ரூ.200க்கும், சாமந்தி ரூ.150ல் இருந்து ரூ.180க்கும், சம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சற்று குறைவு சென்னை, ஜூலை 24- சென்னையில் 22 காரட் ஆபணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,255க்கும், சவரனுக்கு ரூ.1000 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வருத்தம் தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்,ஜூலை 24- கடந்த 21ஆம் தேதி காலை திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு மனு தாரர், தனக்கு உரிய வரை படத்தில் உள்ள குறைகளை களைவது தொடர்பாக கொடுத்த முறையீட்டு மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், அந்த கூட்டத்தில் நில அளவைப் பதிவேடுகள் துறை சார்பில் பங்கேற்ற ஆய்வாளர் யுவராஜ் என்பவரை மாவட்ட ஆட்சியர் கடும் வார்த்தைகளில் பேசிய காணொலி, ஊடகங்களில் வெளியானது. அதை பார்த்த நில அளவை துறையின் அனைத்து ஊழியர்களும் மன வருத்தத்திற்கு ஆளாகி னர். அந்த சம்பவத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் அதிருப்தியை தெரி வித்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்களை ஜுலை 23 அன்று நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியரிடம், நில அளவை துறை சங்க மாநில தலைவர் ஜெ. ராஜா மற்றும் நிர்வாகிகள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்தனர். மனுதாரரின் கோரிக்கை குறித்து முழுமையாக விசாரிக்காமல் செயல்பட்டது வருத்தத்துக் குரியது என்றும், அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.