இளையோருக்கான அரசு முதன்மைத் திட்டங்கள் - கருத்தரங்கம்
புதுக்கோட்டை, ஆக.6 - “எனது இளைய பாரதம்” (நேரு யுவ கேந்திரா), அன்னை கல்வி அறக்கட்டளை மற்றும் புத்தாஸ் இளை யோர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இளையோருக்கான அரசு முதன்மைத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் வை.முத்துராஜா தொடங்கி வைத்தார். அன்னை கல்லூரி தாளாளர் சேவியர் வல்லபராஜ் முன்னிலை வகித்தார். எனது இளையபாரதம் திட்ட உதவி அலுவலர் ஆர்.நமச்சிவாயம் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து பேசினார். அஞ்சல் துறை துறை மாவட்ட கண்காணிப்பாளர் முரு கேசன், மாவட்ட சமூகநல அலுவலர் சியாமளா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளர் ஷராயர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
2,261 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.5.37 கோடி வரவு
பெரம்பலூர், ஆக.6 - பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள பெரம்ப லூர் சர்க்கரை ஆலைக்கு 2024-25 அரைவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய 2,261 கரும்பு விவசாயிகளிடமிருந்து 1,53,827 மெட்ரிக் டன்கள் கரும்பு கொள்முதல் செய்யப் பட்டு அரைவை செய்யப்பட்டது. ஆலை அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயி களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் வழங்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு, வேளாண்மை உழவர் நலத்துறை அரசாணைபடி ரூ.5.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு வழங்கிய விவ சாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-26 ஆம் ஆண்டில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப்பாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,450 மானியமாகவும், அகலப்பாருடன் கூடிய ஒரு பரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,200-ம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதனுடன் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின்கீழ் வல்லுநர் விதைக் கரும்பு, திசு வளர்ப்பு நாற்று நடவு, பருசீவல் நாற்றுகள், ஒரு பரு விதைக்கரணை நடவு போன்ற பல்வேறு இனங்க ளில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே அதிக பரப்பில் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி/ மாவட்ட வருவாய் அலுவலர் வ.மாலதி தெரிவித்து உள்ளார்.