நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஆக. 29- அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. அற்புதராஜ் ரூஸ் வெல்ட் தலைமை தாங்கினார். போராட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டப் பொருளாளர் ப. அந்துவன்சேரல் விளக்க உரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் நன்றி கூறினார்.