tamilnadu

img

உடல் தானம் செய்த அரசு ஊழியர் சங்க தலைவர்

உடல் தானம் செய்த  அரசு ஊழியர் சங்க தலைவர்

கரூர், ஜூலை 30 - தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயலாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளருமான பொன்.ஜெயராம், தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவர்கள், மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் தானம்  செய்வதாக விருப்பம் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் லோகநாயகி  உடல் தானம் செய்ததற் கான சான்றிதழை பொன்.ஜெயராமிடம் வழங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் சி.கண்ணன், துணைச் செய லாளர் முத்துமாரி, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கோபி, வட்ட கிளைத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செங்கல் சூளையை சூழ்ந்த நீர்

பாபநாசம், ஜூலை 30 - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணை 4 ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரி  ஆற்றில் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் காவிரி ஆற்றி லிருந்து, கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொள்ளி டக் கரையோரமுள்ள கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கரை யையொட்டி நீர் சென்றது. இதனால் அப்பகுதியில் இயங்கி வந்த ஏராளமான செங்கல் சூளைகள் பாதிக்கப்பட்டன. அதில்  வேலை செய்த தொழிலாளர்கள் முடிந்தளவு சுடாத செங்கற் களை சாலையில் அடுக்கி வைத்தனர். ஆனால் குடியிருப்பு களுக்குள் நீர் புகவில்லை.  காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை  அவசியம். மேலும், அரிப்பெடுத்த கொள்ளிடத்தின் தென் கரை சாலையை புதிதாக தரமாக போட வேண்டும் என்கின்ற னர் அப்பகுதி விவசாயிகள்.