புதிய ஏஐ கருவியை அறிமுகம் செய்துள்ள கூகுள்
கூகுள் நிறுவனம், தனது ஜெமினி செயலியில் படங்களை உருவாக்கும் மற்றும் தொகுக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெமினி 2.5 Flash Image அல்லது Nano Banana என அழைக்கப்படும் இந்த ஏஐ மாடலை நேரடியாக Gemini செயலியில் ஒருங்கிணைக்க உள்ளது. இந்த புதிய ஏஐ மாடல், படங்களை இயல்பான மொழி கட்டளைகளின் மூலம் திருத்துவதற்கும், மாற்றுவதற்கும் உதவுகிறது. உதாரணமாக, ஒரு படத்தின் பின்னணியை எளிதில் மங்கலாக்க (blur) செய்யலாம், தேவையற்ற பொருட் களை நீக்கலாம், குறிப்பிட்ட ஒருவரை புகைப்படத்திலிருந்து அகற்றலாம். மேலும், புகைப்படத்தில் உள்ள நபரின் போஸை (pose) மாற்றி அமைக்கவும் முடியும். அதுமட்டுமல்லாமல், கருப்பு-வெள்ளை புகைப்படங் களுக்கு இயல்பான வண்ணங்களைச் சேர்த்து, அவற்றை உயிரோட்டமிக்கதாக மாற்றும் திறனும் இதில் உள்ளது.
விரைவில் ஐபோன்களுக்கான கோப்பு பகிர்வு செயலி அறிமுகம்!
ஆப்பிள் ஐபோன்களுக்கான கோப்பு பகிர்வு (File Transfer) செயலியான ‘குயிக் ஷேர்’-ஐ (Quick Share) கூகுள் நிறுவனம் விரைவில் அறி முகப்படுத்த உள்ளது கூகுள் தனது வயர்லெஸ் கோப்பு பகிர்வு கருவியான குயிக் ஷேரை ஆப்பிள் ஐபோன்களுக்கு விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிளின் ஏர் டிராப்பை (Air Drop) போலவே, குயிக் ஷேர், வைபை மற்றும் புளூடூத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை விரைவாக மற்றொரு மொபைல் அனுப்ப அனுமதிக்கும். ஏர் டிராப் ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமே என்றாலும், குயிக் ஷேர் தற்போது ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் குரோம் ஓஎஸ் (os) ஆகியவற்றில் இயங்கும். கூகுள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ராய்டு சாதனங்களில் ‘குயிக் ஷேர்’ செயலியை அறிமுகப்படுத்தியது. தற்போது, படிப்படியாக இந்த அம்சத்தை ChromeOS மற்றும் Windows உள்ளிட்ட பிற தளங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
கூகுள் டிரான்ஸ்லேட்டில் புதிய அம்சங்கள் சேர்ப்பு!
கூகுள் டிரான்ஸ் லேட்டில் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் எளிதாக உரையாடும் அம்சமும், புதிய மொழியை கற்றுக்கொள்ளும் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது மொழிபெயர்ப்பு செயலியான கூகுள் டிரான்ஸ்லேட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடுகளைச் செய்துள்ளது. இதன்மூலம், சொற்கள் மொழி பெயர்க்கப்படுவதைத் தாண்டி, நேரடி உரையாடல்களும், மொழி பயிற்சியையும் பய னர்களுக்கு வழங்கும் வகையில் மேம்படுத்தப் ப்பட்டுள்ளது. கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில், தற்போது 70-க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழி பெயர்க்கும் வசதியுடன் லைவ் உரையாடல்களை மேற்கொள்ள லாம். இவற்றில் தமிழ், இந்தி, அரபு, பிரெஞ்சு, கொரியன், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகள் அடங்கும். இந்த அம்சத்தைப் பயன் படுத்த, பயனர்கள் Android அல்லது iOS இல் செயலியைத் திறந்து, “நேரடி மொழிபெயர்ப்பு” என்பதை கிளிக் செய்து, மொழி களைத் தேர்ந்தெடுத்து, பேசத் தொடங்கலாம். இந்தச் செயலி உடனடியாக மொழிபெயர்ப்பு களைத் திரையில் காண்பித்து, அவற்றை குரல் வடிவிலும் வழங்குகிறது. கூகுள் டிரான்ஸ்லேட் இப்போது ஒரு புதிய “practice mode”-ஐ அறிமுகம் செய்துள்ளது, பிற மொழி களை கற்க விரும்பும் பயனர் களுக்கு, அவர்களின் திறன் நிலை அடிப்படையில் தனிப்பயனாக்கப் பட்ட வகையில் பேசுவதற்கு மற்றும் கவனிப்பதற்கும் பயிற்சிகளை வழங்குகிறது.