ஒரே நாளில் ரூ. 2,080 உயர்வு தங்கம் விலை ரூ. 97,400
சென்னை, அக். 21 - கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை யன்று பவுனுக்கு 1,600 ரூபாயும், தீபாவளி நாளான திங்களன்று பவுனுக்கு 640 ரூபாயும் தங்கத்தின் விலை குறைந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பவுனுக்கு 2,080 ரூபாயாக தங்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 12,180 ரூபாய்க்கும், ஒரு பவுன் 97,440 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 5,600 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கனமழை எதிரொலி: முதல்வரின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு
சென்னை: சென்னை மற்றும் கடலோர மாவட் டங்களில் கனமழை தொடர்வதால், வரும் 24 மற்றும் 25 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலி னின் தென்காசி பய ணம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென் காசிக்கு முதல்வர் செல்ல இருந்த நிலை யில், சென்னையில் நில வும் கனமழை சூழல் காரணமாக இந்த பய ணம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள தாக அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தெரிவித்துள் ளார்.
ரூ. 790 கோடிக்கு மது விற்பனை
சென்னை: தமிழ் நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள் ளன. இதன் மூலம், நாளொன்றுக்கு 120 கோடி ரூபாய் முதல் 130 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறு கிறது. கடந்த ஆண்டுக்கு தீபாவளி மது விற்பனை ரூ. 438 கோடியாக இருந்தது. ஆனால், இந்தாண்டு இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற் பனை நடந்துள்ளது.
7,88,240 பயணிகள் பயணம்
சென்னை: தீபாவளி திருநாளையொட்டி நான்கு நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 8,361 பேருந்துகள் மற்றும் 6,933 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,294 பேருந்துகள் மூலம் 7,88,240 பேர் பயணம் செய்துள்ளதாக போக்கு வரத்து துறை அமைச் சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் 14 ஏரிகள் நிரம்பின!
காஞ்சிபுரம்: காஞ்சி புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை யால் 14 ஏரிகள் நிரம்பி யுள்ளன. பொதுப் பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 381 ஏரி களில் 14 ஏரிகள் முழு மையாக நிரம்பியுள்ளன.