தங்கம் விலை ரூ. 90 ஆயிரத்தை தாண்டியது
சென்னை, அக். 8 - சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு கள் அதிகரித்துள்ள கார ணத்தால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. திங்கள் கிழமை பவுனுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ. 89 ஆயிரமானது. செவ்வாய்க்கிழமை மீண்டும் ரூ. 600 உயர்ந்து ரூ. 89,600 ஆக உயர்ந்தது. இந்நிலை யில், தங்கம் விலை ரூ. 800 மீண்டும் உயர்ந்து, புதன் கிழமையன்று தங்கம் விலை ரூ. 90,400-க்கு விற்பனை யானது. எனினும் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,67, 000க்கும் விற்பனையாகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு ரூ.432 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை 2025ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிலவரப்படி ரூ.90,400 ஆக உயர்ந்துள்ளது.