சென்னை, ஜன. 28- பொது இன்சூரன்ஸ் துறைகளை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளியன்று (ஜன. 28) நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய செயலாளர் சாந்தகுமார், ஜி.ஜெயமூர்த்தி, எஸ்.பாலமுருகன், முருகன், மகேஷ், அருண்பிரசாத், தமிழ்சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஊழியர்களும், அதி காரிகளும், வளர்ச்சி அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஒருநாள் அடை யாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள் ளனர். கிழக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட் டுள்ளன.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 2012ஆம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு செய்யப்படவில்லை. 54 மாதங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை அரசும், நிர்வாகமும் செவி சாய்க்கவில்லை. பொது இன்சூரன்ஸ் துறைகளை தனி யாரிடம் தாரைவார்க்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதைக் கண்டித்து நாடு முழுவதும் 40 ஆயிரம் ஊழியர்களும், தமிழகத்தில் 4 ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லை யென்றால் தொடர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிடம் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.