tamilnadu

img

குப்பை பிரச்சனை: நிரந்தர தீர்வு கோரிய போராட்டக்காரர்கள் கைது

குப்பை பிரச்சனை: நிரந்தர தீர்வு கோரிய போராட்டக்காரர்கள் கைது

சிபிஎம் கண்டனம்

சிபிஎம் கண்டனம் திருப்பூர், ஜூலை 1– திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்டி வருவதால் ஏற்படும் சுகா தாரச் சீர்கேட்டிற்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரி போராடிய மக்க ளைக் கைது செய்த அரசு நிர்வாகத் தின் அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.  இதுதொடர்பாக சிபிஎம் திருப் பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர்  ஆர்.காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதா வது, மாநகரப் பகுதிகளில் சேகரமா கும் குப்பையை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப் பற்ற முறையில் கொட்டி வருகி றது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதி களில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகா தாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாறைக்குழிக்கு அரு கிலுள்ள மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட கடுமை யான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு  காணக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின் றனர். அரசியல் கட்சியினர், குடியி ருப்போர் சங்கத்தினர், பொதுமக் கள் எனப் பல தரப்பினரும் மாநக ராட்சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித தீர் வும் எட்டப்படவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தக் குப்பை பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற் குப் பதிலாக, பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டுவது என்ற  தற்காலிகத் தீர்வையே மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தங்கள் எதிர்ப் பைப் பதிவு செய்யும் விதமாக அப் பகுதி மக்கள் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்காமல், காவல்துறையின் பாதுகாப்போடு குப்பைகள் அங்கு கொட்டப்படுகின்றன. இதைக் கண் டித்து செவ்வாயன்று நெருப்பெரிச் சல், தோட்டத்துப்பாளையம், வாவிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் குப்பை லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நடத்தினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், சுகா தாரமற்ற முறையில் குப்பைக ளைக் கொட்டுவதற்கு மக்கள்  எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமா னது என சிபிஎம் வலியுறுத்தியுள் ளது. நியாயமான கோரிக்கைகளு டன் போராடும் மக்களைக் கைது செய்து, அச்சுறுத்தி பணிய வைக் கும் அணுகுமுறையை மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் மேற்கொள் வது சரியானதல்ல. இது கண்டனத் திற்குரியது. இத்தகைய அணுகு முறை பிரச்சனைக்குத் தீர்வு காண உதவாது. திடக்கழிவு மேலாண்மை பிரச்சனையில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி, சரியான தீர்வை எட்ட  வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நெருப்பெருச்சல் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர் குப்பை லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமன்ற உறுப்பினர் இந்திராணி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, சிபிஐ பரமசிவம், கொமதேக கவிதா, தேமுதிக துறைசாமி, பாஜக உதயகுமார், தவெக சந்திரசேகர், ஆவண எழுத்தர்கள் சங்க பஜ்சலிங்கம், குடியிருப்போர் நல சங்கத்தின் ஆதவன் பெரியசாமி, செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.