tamilnadu

சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து சென்னை-பெங்களூர் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து சென்னை-பெங்களூர் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே

திருவள்ளூர், ஜூலை 13- சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலை யம் அருகே ஞாயிறன்று அதிகாலை  தடம்புரண்டு தீ பிடித்ததால், அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தி வைக்கப் பட்டது. சென்னை இந்தியன் ஆயில் நிறு வனத்தில் இருந்து பெங்களூரு வுக்கு டேங்கர்களில் டீசல் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்று கொண் டிருந்தது. காலை 5 மணியளவில் திரு வள்ளூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகியதால் எரிபொருள் கசிந்து தண்டவாளத்தில் கொட்டி தீ  விபத்து ஏற்பட்டது. இதனால் பல  கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை  தெரிந்தது. சரக்கு ரயிலில் தீ விபத்து  ஏற்பட்டதால், ரயில் தண்டவாளத் தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.    ரயில் சேவை பாதிப்பு தீ விபத்து காரணமாக அப்பகுதி யில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் வழியாக  பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களும், பெங்களூருவில் இருந்து சென்னை வரும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து  செய்யப்பட்டன. கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண் டிருந்த அதிவிரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரக்கு ரயிலில் காலை 5 மணி யளவில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு  துறையினரும் பேரிடர் நிர்வாக படை யினரும் 5 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயில் தீ விபத்து குறித்து விசாரிக்க  ரயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3  தனிப்படை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு  வந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்,  மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் எஸ்.பி. சீனிவாச பெருமாள் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாச பெருமாள், “அம்பத் தூர், ஆவடி, திருப்பெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீய ணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டன. சரக்கு ரயிலின் 52 பெட்டி களில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து  சேதமானது. தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தன. சரக்கு ரயில் டேங்கருக்கு 70,000  லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர் களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரயில் தீ  விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான  டீசல் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட  சரக்கு ரயிலின் சில டேங்கர்களை பிரித்து, திருவள்ளூர் ரயில் நிலை யத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி யில் கரும்புகை எழுந்த காரணத்தால்  சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனால் போக்குவரத்து சீராகவில்லை.