tamilnadu

img

சுதந்திர வேட்கை மிக்க கம்யூனிஸ்ட்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகத்தான மார்க்சிய தலைவர் தோழர் சி.கோவிந்தராஜன். புவனகிரி போர்டு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே சுதந்திர வேட்கையின் காரண மாக ஆங்கிலேய அரசாங்கத்தால் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புவனகிரி காவல்நிலையத்தில் கையெழுத்திட ஆணையிடப்பட்டவர் சி.கோவிந்தராஜன். நெல்லிக்குப்பம் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறையும் நகர்மன்ற தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர். அப்போதே தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதிலும் தன்னை முன்னிறுத்திய தோழர். 8 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறைவாசமும். 5 ஆண்டுகள் 5 மாதங்கள் தலை மறைவு வாழ்க்கையை அனுபவித்தவர். சமூக விரோதிகளின் கத்திக் குத்துக்கு உள்ளாகியும் சோர்வடையாதவர். தேசம் காக்கும் அவரது உயரிய பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.