tamilnadu

img

இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16-  தமிழ்நாடு மின்வாரியத் துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூலை 15 அன்று துவங்கி ஜூலை 27 ஆம் தேதி வரை மாலையில் நடைபெறுகிறது.  இந்த பயிற்சி வகுப்பின் துவக்க நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் இருதயராஜ் தலைமை தாங்கினார். வகுப்பை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். மின்வாரிய ஓய்வு பெற்ற செயற்பொறியாளர்கள் சண்முகசுந்தரம், மணிமாறன் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் துணைத் தலைவர்கள் நடராஜன், எஸ்.கே. செல்வராஜ், வட்டச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.