tamilnadu

img

அய்யலூர் சிபிஎம் அலுவலக அடிக்கல் நாட்டு விழா

அய்யலூர் சிபிஎம் அலுவலக அடிக்கல் நாட்டு விழா மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அலுவலக கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முன்னாள் திண்டு க்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பிரு மான கே.பாலபாரதி அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். சனியன்று மாலை நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளரும், வடமதுரை பேரூரா ட்சித் துணைத் தலைவருமான எம். மலைச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம். கே.சம்சுதீன், கே.எம்.மனோகரன் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப் பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பி னரும், திண்டுக்கல் மக்களவை உறு ப்பினருமான ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், கே.அருள்செல்வன், டி. முத்துச்சாமி. பி.ஆஸாத், தா.அஜாய் கோஷ், மூத்த தோழர்கள் வி.குமர வேல், எம்.ஆர்.முத்துச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ஜமால் முகமது,  மீனாட்சி சுந்தரம், சங்கர்,தங்கராஜ்,  சண்முகம், குணசேகரன், முருகன், கண் ணன், ஜெயராஜ், ராஜேஸ்வரி, அஞ்சுலெட் சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.